Home கலை உலகம் அவதார் 2,3,4 மற்றும் 5-வது பாகங்கள் 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும்!- டிஸ்னி

அவதார் 2,3,4 மற்றும் 5-வது பாகங்கள் 2 ஆண்டுகள் இடைவெளியில் வெளிவரும்!- டிஸ்னி

733
0
SHARE
Ad

ஹாலிவுட்: கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியாகி உலக அளவில் வசூல் சாதனையிலும், புது அனுபவத்தையும் ஏற்படுத்திய அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்று இரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த நான்கு பாகங்கள் வெளியாகும் தேதிகளை அறிவித்துள்ளது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம்.

டிஸ்னி நிறுவனம், செஞ்சுரி பாக்ஸ் நிறுவனத்தை வாங்கிய பின், அதன் கட்டுப்பாட்டில் தற்போது தயாரிப்பில் இருக்கும் படங்களும் டிஸ்னியின் கைக்கு வந்துவிட்டது.

இதில் மிக முக்கியமான ஒன்று ஜேம்ஸ் கேமரூனின்அவதார்படங்களும் அடங்கும். 2009-இல் வெளியானஅவதார்திரைப்படம், உலக திரைப்பட வரலாற்றில் அதிகம் வசூல் செய்த படமாக மாறியது. இந்த படத்தின் அடுத்த பாகும் வெளியாகும் என்று இரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் 1 பில்லியன் பொருட்செலவில் அவதார் படத்தின் அடுத்த பாகங்களுக்கான படப்பிடிப்பு ஆரம்பமாகி விட்டது என்றும் முதல் பாகத்தை விநியோகித்த  செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் அடுத்த பாகங்களை தயாரிக்க ஜேம்ஸ் கேமரனுடன் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் இனி இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு அவதார் படத்தினை டிஸ்னி திட்டமிட்டு அதற்கான வெளியீடு தேதியை அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் 2021, 23, 25, 27 ஆண்டுகளில் அவதார் படத்தின் 2, 3, 4, 5 பாகங்களை வெளியிட முடிவு செய்துள்ளது.