Home One Line P2 அவதார் 2: கடலை அடிப்படையாகக் கொண்ட புதிய உலகு அறிமுகப்படுத்தப்பட உள்ளது!

அவதார் 2: கடலை அடிப்படையாகக் கொண்ட புதிய உலகு அறிமுகப்படுத்தப்பட உள்ளது!

667
0
SHARE
Ad

ஹாலிவுட்: ஜேம்ஸ் கேமரூனின் அவதார் 2-இன் 2019-ஆம் ஆண்டிற்கான முதன்மை படப்பிடிப்பு கடந்த வாரம் முடிக்கப்பட்ட நிலையில், அதன் படப்பிடிப்புக் குழுவினரின் உறுப்பினர்களில் ஒருவர், இந்த படம் இதுவரை தயாரிக்கப்பட்ட மிக முக்கியமான நீர் மூழ்குதல் திரைப்படமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

அவதார் 2 திரைப்படத்தில் பல நடிகர்கள் நீருக்கடியில் நிறைய காட்சிகளில் நடிக்க வேண்டியுள்ளது என்று படத்தின் இயக்குனர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை கேட் வின்ஸ்லெட் உட்பட பல படக்குழுவினர் நீரில் முழ்கி படப்பிடிப்பில் பங்குப் பெற பயிற்சி பெற்றுள்ளார்கள் என்று கேமரூன் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

கேமரூன் முன்பு ஒரு நேர்காணல்களில் குறிப்பிட்டது போல, அவதார் 2 பண்டோராவின் கடல் பகுதியை ஆராயும் திரைப்படமாகவும், இரசிகர்கள் கடலை அடிப்படையாகக் கொண்டமெட்காயினாஉலகுக்கு அறிமுகப்படுத்தப்படுவார்கள் என்றும் கூறியிருந்தார்.

அவதார் 2 திரைப்படம் வருகிற டிசம்பர் 2021-இல் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.