Home One Line P2 பிரிட்டன்: அதிக பெரும்பான்மையில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி!

பிரிட்டன்: அதிக பெரும்பான்மையில் கன்சர்வேட்டிவ் கட்சி வெற்றி!

771
0
SHARE
Ad

பிரிட்டன்: கடந்த வியாழக்கிழமை பிரிட்டனில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், போரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

மொத்தமாக 650 தொகுதிகளில் 365 தொகுதிகளை கன்சர்வெட்டிவ் கட்சி கைப்பற்றியுள்ளது. ஜெரமி கார்பின் தலைமையிலான தொழிலாளர் கட்சி, வெறும் 203 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. இதன் மூலம் தனிப் பெரும்பான்மையுடன் போரிஸ் ஆட்சியமைக்க இருக்கிறார்.

பிரெக்சிட் ஒப்பந்தத்தைமுன்வைத்து இந்த தேர்தல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வேளையில், தற்போது அதனை முன்வைத்து தேர்தலைச் சந்தித்து கன்சர்வேடிவ் கட்சி வெற்றிப் பெற்றுள்ளது

#TamilSchoolmychoice

வருகிற ஜனவரி 31-ஆம் தேதிக்குள் பிரெக்சிட் ஒப்பந்ததை நிறைவேற்றுவோம் என்று போரிஸ் ஜோன்சன் தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதியளித்து குறிப்பிடத்தக்கது.