Home One Line P2 குடியுரிமைச் சட்டத் திருத்தம்: வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரிட்டன், அமெரிக்கா தங்கள் மக்களுக்கு அறிவுறுத்து!

குடியுரிமைச் சட்டத் திருத்தம்: வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு பிரிட்டன், அமெரிக்கா தங்கள் மக்களுக்கு அறிவுறுத்து!

886
0
SHARE
Ad

புது டில்லி: கடந்த புதன்கிழமை குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவவை நிறைவேற்றிய பின்னர் வடகிழக்கு மாநிலங்களில் தீவிரப் போராட்டம் நீடித்து வருகிறது.

இதனிடையே, கூடுமான வரையில் இப்பகுதிகளுக்கு செல்வதை தவிக்கவும், அப்பகுதியில் உள்ள தங்கள் நாட்டினரை எச்சரிக்கையாக இருக்கவும் கூறி அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தங்கள் குடிமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் டிசம்பர் 15 முதல் 17-ம் தேதி வரை நடைபெற இருந்த இந்தியா ஜப்பான் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே வருகை தருவதாக இருந்தது. எனினும், அசாமில் தொடர்ந்து வரும் போராட்டத்தில் காரணமாக ஷின்சோ அபே பங்கேற்க இருந்த மாநாடு ஒத்திவைக்கப்படும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன

#TamilSchoolmychoice

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக அசாம், திரிபுராவில் கலவரம் ஏற்பட்டுள்ளது, மேலும் அது தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தகக்து. சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் ஏற்பட்டுள்ளன.

இந்த வன்முறையைக் கட்டுப்படுத்த இராணுவமும் துணை இராணுவமும் குவிக்கப்பட்டுள்ளன.