கோலாலம்பூர்: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20- ஆம் தேதி அனுசரிக்கப்படும் அனைத்துலக மகிழ்ச்சி தினத்துடன் இணைந்து 2019-ஆம் ஆண்டில் மலேசியாவின் 10 மகிழ்ச்சியான நகரங்களில் மலாக்கா, கோலா திரெங்கானு மற்றும் சிரம்பான் ஆகிய நகரங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
நகர்ப்புற மற்றும் ஊரக திட்டமிடல் துறையால் நடத்தப்பட்ட 2019 தேசிய மகிழ்ச்சி குறியீட்டு ஆய்வின் மூலம், மகிழ்ச்சியான நகரங்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெந்தோங், குவாந்தான், ஜாசின், கூலாய், தைப்பிங், ஜெலி மற்றும் யான் ஆகியவை பட்டியலில் உள்ளன.
இந்த ஆய்வில் நகர அளவிலான ஊராட்சி அதிகார நிர்வாகப் பகுதிக்குள் இரண்டு நகரங்களும், நகராட்சி அளவிலான ஊராட்சி அதிகாரப் பகுதியில் ஆறு நகரங்களும், மாவட்ட அளவிலான ஊராட்சி அதிகாரப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களும் அடங்கும்.
2019 மலேசிய மகிழ்ச்சி குறியீட்டு ஆய்வு 80.4 விழுக்காட்டு நாட்டின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக நகர்ப்புற மற்றும் ஊரக திட்டமிடல் துறை இயக்குனர் டத்தோ முகமட் அனுவார் மைடின் கூறினார்.