Home One Line P1 ஜூன் 9-இல் முடிவடையும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா?

ஜூன் 9-இல் முடிவடையும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நீட்டிக்கப்படுமா?

659
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தற்போது அமுலில் உள்ள நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்படுமா என்பது நாளை ஞாயிற்றுக்கிழமை ஜூன் 7ஆம் தேதி அறிவிக்கப்படும்.

பிரதமர் மொகிதின் யாசின் மத்திய அரசாங்கத்தின் சார்பாக இந்த அறிவிப்பை வெளியிடுவார். நாளை பிற்பகல் 3.00 மணி அளவில் வானொலி, தொலைக்காட்சி வழி நாட்டு மக்களுக்கு ஆற்றும் சிறப்புரை ஒன்றின் வழி மொகிதின் இந்த அறிவிப்பை வெளியிடுவார். தற்போதுள்ள நடமாட்டக் கட்டுப்பாடுகள் ஆணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஜூன் 9-ஆம் தேதியோடு முடிவடைகிறது.

தற்போது அமுலில் இருப்பது போன்று நடமாட்டக் கட்டுப்பாடுகள் சில தளர்வுகளுடன், தொடர்ந்து அமுலில் இருந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் இன்று ஜூன் 10 முதல் சிகை அலங்கார கடைகள், அழகு நிலையங்கள் மீண்டும் செயல்பட முடியும் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்திருக்கிறார்.

இதேபோல், ஜூன் 15 முதல் இரவுச் சந்தைகள் மற்றும் திறந்த சந்தை கடைகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால், அனைத்தும் கடுமையான வழிகாட்டுதல்களுக்கு மத்தியில் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

“அவர்கள் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு இணங்கவில்லை என்றால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று இஸ்மாயில் சப்ரி இன்று சனிக்கிழமை புத்ராஜெயாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.