Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணிக்கு 107 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உண்டு!- அன்வார்

நம்பிக்கைக் கூட்டணிக்கு 107 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உண்டு!- அன்வார்

501
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நம்பிக்கைக் கூட்டணி மற்றும் அதற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 107 என்று பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

“நாம்  ஒன்று கூடி ஒரு முடிவினை எடுத்துள்ளோம். எதுவாக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்.” என்று இன்று முகநூலில் ஒரு நேரடி ஒளிபரப்பில் அவர் தெரிவித்தார்.

“இப்போது நமக்கு 107 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. நாங்கள் ஓர் அணியாக முன்னேறுவோம்.”

#TamilSchoolmychoice

“குழப்பங்கள், பேராசைகள் மற்றும் இலஞ்சம் நிறுத்தப்பட வேண்டும்.” என்று அவர் கூறினார்.

நேற்று புதன்கிழமை பிகேஆர் தலைமையகத்தில் துன் டாக்டர் மகாதீர் முகமட் உட்பட வாரிசான் கட்சித் தலைவர் ஷாபி அப்துல்லா மற்றும் பிற நம்பிக்கைக் கூட்டணி தலைவர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடந்தது.