Home One Line P1 ஷாபி அப்டாலுக்கு முழு ஆதரவு, அவதூறுகளை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஷாபி அப்டாலுக்கு முழு ஆதரவு, அவதூறுகளை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்

633
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: வாரிசான் கட்சியிலிருந்து பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேறியதாக வெளியிடப்பட்ட செய்தி மற்றும் அவதூறுகளை எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதற்கு மாறாக கட்சி தலைவரும், சபா மாநில முதல்வருமான ஷாபி அப்டாலுக்கு தாங்கள் முழு ஆதரவை வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

“கடந்த ஜூன் 9- ஆம் தேதி ஹாரியான் மெட்ரோவில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் வாரிசான் கட்சியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றம் மற்றும் சமூக ஊடகங்களில் அது தொடர்பான கருத்துக்களை நாங்கள் குறிப்பிடுகிறோம். இந்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை.” என்று அவர் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

“இம்மாதிரியான அவதூறுகளை பரப்பும் நபர்களுக்கு எதிராக எங்கள் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஷாபி அப்டாலின் மீது முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அவருடன் தொடர்ந்து இணைந்து நாட்டின் நன்மைக்காக செயல்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட அறிக்கையில் லீவ் வூய் கியோங் (பத்து சாபி) டேரேல் லெய்கிங் (பெனாமாங்), மொஹமடின் கெதாபி (லஹாட் டத்து ), அஜிஸ் ஜம்மான் (செபங்கார்), இஸ்னாராய்ஷா முனிரா (கோத்தாபெலுட்), மாமுன் சுலைமான் (காலாகாகன் ) , அகமட் ஹசான் (பாபார்), மற்றும் ரொஸ்மான் இஸ்லி (லாபுவான்) ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

“இக்கால கட்டத்தில் நமக்கு முக்கியமான சில விவகாரங்கள் உள்ளன. மக்களுக்கு உதவுவது மேலும் கொவிட்- 19 பாதிப்பை எதிர்த்து போராடுவது.” என்று அவர்கள் கூறினர்.