Home One Line P1 “பிள்ளைகளின் வளர்ப்பில் தந்தையர்களின் பங்களிப்பு உயர்வானது” – சரவணனின் தந்தையர் தின வாழ்த்துச் செய்தி

“பிள்ளைகளின் வளர்ப்பில் தந்தையர்களின் பங்களிப்பு உயர்வானது” – சரவணனின் தந்தையர் தின வாழ்த்துச் செய்தி

730
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஒரு தனி மனிதர் வாழ்க்கையின் பங்கைவிட, பிள்ளைகளின் வளர்ப்பில் தந்தையர்களின் பங்களிப்பானது மிகவும் உயர்வானது என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் தமது தந்தையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“ஒரு தந்தை தனது நிழலில்கூட பிள்ளைகளைத்தான் காட்சிகளாகப் பார்க்கிறார்.  எத்தனை தொலைவில் இருந்தாலும், தந்தை-பிள்ளைகளின் உறவினை எப்பொழுதுமே பிரிக்க முடியாது. வாழும்போது பிள்ளைகளுக்காக சந்திக்கும் அவரது சிரமங்கள் – போராட்டங்கள் அனைத்தும் சொல்லில் அடங்காதது ஆகும். ஒரு தந்தை தனது பிள்ளைகளைப் பட்டதாரிகளாக அல்லது நிபுணத்துவக் கல்வியாளர்களாக உருமாற்றம் காணுவதற்கு, தனது வாழ்நாளையே செலவழிக்கிறார். அத்தனை சிரமங்களையும், வேதனைகளையும் தாங்கிக் கொள்ளும் தந்தைமார்களை, தனது இறுதி காலத்தில் அவரது பிள்ளைகள் அவரது உழைப்பினை மதித்து, அவருக்கு உரிய மரியாதை வழங்கி மகிழ்ச்சியுடன் அவரைப் பேணிக் காக்க வேண்டும்” என தனது செய்தியில் சரவணன் கேட்டுக் கொண்டார்.

“மேலும், உடற்குறையுள்ள பிள்ளைகளுக்கு தந்தையாக இருக்கும் ஒருவர், அப்பிள்ளையின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் – சிறந்த வாய்ப்பினைப் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்தில் அவர்படும் அல்லல்களுக்கு அளவேயில்லை என்றுதான் கூற வேண்டும். இச்சூழல்களில் உள்ள தந்தைகளின் தியாகமும் – போராட்டங்களும் என்றுமே போற்றத்தக்கதாகும்” என்றும் சரவணன் தனது அறிக்கையில் புகழாரம் சூட்டினார்.

#TamilSchoolmychoice

பிள்ளைகள் வளரும்போது அவர்களுக்கு தந்தைமார்கள் வழங்கும் தன்னம்பிக்கையும், ஊக்கமும்தான் ஒரு தந்தையின் வெற்றியாகும் என்றும் மஇகாவின் தேசிய துணைத் தலைவருமான சரவணன் தந்தையர் தினத்தை முன்னிட்டு வழங்கிய வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.