கோத்தா கினபாலு: ரிக்டர் அளவில் 4.7 என்ற மிதமான நிலநடுக்கம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) காலை 9.58 மணிக்கு சபாவின் குடாட்டில் உணரப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி, வடக்கே 6.92 டிகிரி மற்றும் கிழக்கில் 116.37 டிகிரி, 629 கி.மீ ஆழத்தில், குடாத்துக்கு மேற்கே 47 கிலோமிட்டரில் இருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம் ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இருப்பினும், இது மலேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.