Home One Line P1 கொவிட்19: புதிதாக மூவருக்கு தொற்று, மலேசியர்கள் பாதிப்பு இல்லை

கொவிட்19: புதிதாக மூவருக்கு தொற்று, மலேசியர்கள் பாதிப்பு இல்லை

519
0
SHARE
Ad

புத்ரா ஜெயா: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,643-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 3 சம்பவங்களில், ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர். உள்நாட்டில் இரு வெளிநாட்டவர்களுக்குத் தொற்றுக் கண்டுள்ளது.

#TamilSchoolmychoice

இன்று 65 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் ண்ணிக்கை 8,437-ஆக உயர்ந்தது.

நாட்டில் மொத்தம் 85 பேர் மட்டுமே இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருவருக்கும் சுவாசக் கருவி உதவித் தேவைப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி நாட்டில் எந்தவொரு தொற்றும் ஏற்படவில்லை. ஒரே ஒரு இறக்குமதி சம்பவம் மட்டுமே பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து 28 நாட்களுக்கு நாட்டில் எந்தவொரு கொவிட்19 பாதிப்புகள் பதிவு செய்யப்படாமல் இருந்தால், நாடு இத்தொற்றிலிருந்து விடுபட்டதாக அர்த்தம் என்று சுகாதார அமைச்சு கூறியிருந்தது.