Home One Line P1 ஜசெக: தேசிய கூட்டணிக்கு ஆதரவானவர்கள் நீக்கம்!

ஜசெக: தேசிய கூட்டணிக்கு ஆதரவானவர்கள் நீக்கம்!

577
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கட்சியை விட்டு வெளியேறி தேசிய கூட்டணியை ஆதரித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உதவிய கட்சி உறுப்பினர்களை ஜசெக நீக்கியுள்ளது.

ஜசெக ஒழுக்காற்றுக் குழுவின் தலைவர் சோங் சியெங் ஜென் கூறுகையில், காங் லாய் லிங், எங் சூக் வை மற்றும் கி போ சோங் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்க குழு இன்று முடிவு செய்துள்ளது என்று கூறினார்.

துரோனோ சட்டமன்ற உறுப்பினர் பவுல் யோங் சூ கியோங்கிற்கு ஆதரவாக அவர்கள் மூவரும் எதிர் பிரேரணை தாக்கல் செய்த பின்னர், அவர்கள் மீது ஒழுக்காற்றுக் குழுவுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சோங் கூறினார்.

#TamilSchoolmychoice

“அவர்கள் அனைவரும் நீக்கப்பட்ட பவுல் யோங் சூ கியோங்கிற்கு தீவிரமாக உதவுவதாகக் கண்டறியப்பட்டது. கட்சித் தாவிய அல்லது நீக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கூறியிருந்தும் அவர்கள் அவ்வாறு செய்துள்ளனர்.

“தேசிய கூட்டணி அரசாங்கத்தின் பத்து காஜா மாவட்ட ஆட்சி உறுப்பினராக காங் லாய் லிங் நியமிக்கப்பட்டுள்ளார்.” என்று அவர் கூறினார்.

“தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் பதவியேற்ற எந்தவொரு உறுப்பினர்களையும், இந்த குழு பொறுத்துக்கொள்ளாது. ” என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக துரோனோ தொகுதியில் ஜசெக சட்டமன்ற உறுப்பினராக இருந்த யோங், ஜசெகவை விட்டு வெளியேறி, தேசிய கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது அவரது சேவை மையத்தில் எதிர்ப்புக்களைத் தூண்டியது.