கோலாலம்பூர்: டத்தோஸ்ரீ பட்டம் பெற்ற இந்திய தொழிலதிபர் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் டத்தோ பட்டம் பெற்ற ஒருவர் உட்பட அறுவர் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகின்றனர்.
தண்டனைச் சட்டத்தின் கீழ் இந்த 6 பேர் மீது குற்றம் சாட்டப்படும் என்று சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் டத்தோ பாட்சில் அகமட் தெரிவித்தார்.
“இந்த வழக்கு தொடர்பான விசாரணை முழுவதும் பதினொரு கைதுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், ஆறு சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று சட்டத் துறை அலுவலகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
55 வயதான தொழிலதிபரின் சடலம் ஜூன் 27 அன்று பத்து 27, ஜாலான் ராவாங் பெஸ்தாரி ஜெயாவில் கண்டெடுக்கப்பட்டதாக பெர்னாமா முன்பு தெரிவித்திருந்தது.
ஜூன் 10- ஆம் தேதி காலை 10.30 மணியளவில் ஜாலான் பெர்சியாரான் பெர்டானா, பண்டார் ஸ்ரீ டாமான்சாராவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் உடற்பயிற்சியில் இருந்த போது சம்பந்தப்பட்டவர் கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
(மேலும் தகவல்கள் தொடரும்)