Home One Line P1 ஆபத்தான நிலையில் 189 மலேசிய தப்லீக் உறுப்பினர்கள்

ஆபத்தான நிலையில் 189 மலேசிய தப்லீக் உறுப்பினர்கள்

483
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்தியாவில் 189 மலேசிய தப்லீக் உறுப்பினர்கள் “ஆபத்தான” சூழ்நிலையில் உள்ளனர்.

கொவிட்19 தொற்று பரவுவதைத் தடுக்க இந்தியா அண்மையில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அதன் காரணமாக அவர்கள் மலேசியாவுக்குத் திரும்ப முடியவில்லை.

ஆகவே, அவர்கள் “ஆபத்தான” நிலையில் இருப்பதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசேன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பெரும்பாலானவர்கள் சமூக விசா அனுமதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். சிலர் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

புது டில்லியில் 157 பேர் , சென்னை (23), மும்பை (9) பேர் உள்ளனர்.

“புது டில்லியில் உள்ள 125 தப்லீக் உறுப்பினர்கள் சட்ட நடைமுறைகளை கடந்து, ஜூலை 9, 10 தேதிகளில் விடுவிக்கப்பட்டனர்.

“இந்த வெள்ளிக்கிழமை ஒரு சிறப்பு விமானத்தைப் பயன்படுத்தி அவர்களை வீட்டிற்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் தற்போது செயல்பட்டு வருகிறது.

“கொல்கத்தாவில் ஒன்பது பேரும், சஹாரான்பூரில் இரண்டு பேரும் உட்பட 136 தப்லீக் உறுப்பினர்களை கொண்டு வருவோம்.

“மீதமுள்ள 52 உறுப்பினர்கள் இன்னும் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதே நேரத்தில் அமராவதியில் ஒரு நபர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்” என்று அவர் நாடாளுமன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

தற்போது 37 நாடுகளில் 317 மலேசியர்கள் சிக்கித் தவிக்கிறார்கள் என்று ஹிஷாமுடின் கூறினார்.

வெளிநாடுகளில் 10,159 மலேசியர்கள் சிக்கியிருக்கும் சாத்தியம் இருப்பதாக அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 9,270 பேர் மாணவர்கள்.

“9,270 பேரில் பெரும்பான்மையானவர்கள் தற்போது அவர்களின் இறுதி ஆண்டு படிப்பில் உள்ளனர். இதில் நாடுகடத்தப்படுவதாக (சமீபத்தில் அச்சுறுத்தப்பட்ட) அமெரிக்காவிலும் நம் மாணவர்கள் உள்ளனர்,” என்று அவர் கூறினார்.