பெய்ஜிங்: சீன இராணுவத்துடனான தங்கள் உறவை வெளிப்படுத்த மறுத்ததற்காக அமெரிக்க அமலாக்க அதிகாரிகள் மூன்று சீன புலனாய்வாளர்களை கைது செய்துள்ளனர்.
நான்காவது நபர் தப்பி ஓடி, தற்போது சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு துணைத் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார் என்று வியாழக்கிழமை அமெரிக்க நீதித்துறை தெரிவித்திருந்தது.
“அமெரிக்காவில் இருக்கும்போது மக்கள் விடுதலை இராணுவம் உறுப்பினர்களாக தங்கள் நிலையை மோசடி செய்த திட்டம் தொடர்பாக நான்கு நபர்கள் சமீபத்தில் விசா மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் இங்கு ஆராய்ச்சி செய்யும் பணியில் இருந்துள்ளனர் ” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இவர்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தப்பியோடிய நான்காவது நபரை எப்.பி.ஐ தேடுகிறது. அவர் தற்போது சான் பிரான்சிஸ்கோவில் உள்ள சீனத் தூதரகத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் 25- க்கும் மேற்பட்ட நகரங்களில், சீன இராணுவத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பிற விசா வைத்திருப்பவர்களுடன் எப்.பி.ஐ நேர்காணல்களை நடத்தியதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விசா மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளான ஒவ்வொரு நபருக்கும் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் 250,000 அமெரிக்க டாலர் வரை அபராதமும் விதிக்கப்படும்.