Home One Line P2 இந்தியா: வாட்சாப் மின்னியல் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்

இந்தியா: வாட்சாப் மின்னியல் கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்

737
0
SHARE
Ad

கலிபோர்னியா: இந்தியாவில் வாட்சாப் வாடிக்கையாளர்கள் இனி வாட்சாப் மூலமாக கடன்களைச் செலுத்தலாம்.

சிறு ஓய்வூதியம், காப்பீட்டுத் தொகை, கடன் தொகை போன்றவற்றையும் செலுத்த முடியும் என்று இந்தியாவின் வாட்சாப் தலைவர் அபிஜித் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கிட்டத்தட்ட 400 மில்லியன் வாட்சாப் பயனர்கள் உள்ளனர்.

#TamilSchoolmychoice

வாட்சாப் குளோபல் பின்டெக் விழாவில் பேசிய அபிஜித், வாட்சாப் மின்னியல் கட்டணம் செல்லுத்தும் சேவைக்காக ஐசிஐசிஐ வங்கி, கோட்டாக் மஹிந்திரா, ஹெச்டிஎப்சி உள்ளிட்ட வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், அடுத்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் குறைந்த ஊதிய தொழிலாளர்களுக்கு உதவுவதே தங்களது நோக்கம் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவில் வாட்சாப் கட்டணம் செலுத்தும் முறை வர இருக்கும் பட்சத்தில் மற்ற நிறுவனங்களுக்கு இது கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.