Home One Line P1 பிரதமர் வேட்பாளர் காரணத்தைக் காட்டி பிகேஆர் காலத்தைக் கடத்தக்கூடாது!

பிரதமர் வேட்பாளர் காரணத்தைக் காட்டி பிகேஆர் காலத்தைக் கடத்தக்கூடாது!

507
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அமானா மற்றும் ஜசெக இணைந்து ஒரு கூட்டு அறிக்கையில், நீண்டகால அரசியல் முட்டுக்கட்டைக்கு மத்தியில் புத்ராஜயாவை மீண்டும் கைப்பற்றுவதற்கான முயற்சிகளைத் தொடர பிகேஆரை விட்டுக் கொடுக்கும் போக்கைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளன.

பிகேஆர் மற்றும் லங்காவி நாடாளுமன்ற உறுப்ப்னர் துன் மகாதீர் முகமட் ஆதரவாளர்களுக்கும் இடையே பல மாதங்களாக, உறவுகள் சரியாக இல்லாததால், அவர்களுக்கு ஒரு பாலமாக அயராது செயல்பட்டதைக் குறிப்பிட்டுள்ளனர்.

பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் அல்லது வாரிசான் தலைவர் ஷாபி அப்டால் ஆகியோருக்கு பிரதமர் வேட்பாளராக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற கருத்தை அவர்கள் வலியுறுத்தினர்.

#TamilSchoolmychoice

அதே நேரத்தில் பிகேஆர், அமானா, ஜசெக, வாரிசான் மற்றும் மகாதீர் முகாமின் ஒரு பெரிய கூட்டணி தொடரப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

அமானாவும் ஜசெகவும் அன்வாரை ஒதுக்க மாட்டார்கள் என்று மீண்டும் மீண்டும் அவர்கள் வலியுறுத்தினர்.

எவ்வாறாயினும், எதிர்க்கட்சி கூட்டணிக்கான ஒரே பிரதமர் வேட்பாளராக அன்வார் மட்டுமே இருக்க வேண்டும் என்ற பிகேஆரின் நிலைப்பாட்டை ஜசெக, அமானா நிராகரித்தனர்.

பிரதமர் வேட்பாளர் சர்ச்சையானது, மீண்டும் நம்பிக்கைக் கூட்டணி பிளாஸ் ஆட்சியைக் கைப்பற்றுவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடாது என்று அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.