Home One Line P1 எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் முறையீட்டை சமர்ப்பித்தார்!

எஸ்ஆர்சி வழக்கு: நஜிப் முறையீட்டை சமர்ப்பித்தார்!

553
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், எஸ்ஆர்சி இன்டர்நேஷனலுக்கு சொந்தமான நிதியில் 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளின் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளார்.

பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், ஷாபி அண்ட் கோ வழக்கறிஞர் அலுவலகம் மூலம் மேல்முறையீட்டைத் தாக்கல் செய்தார்.

அவரது வழக்கறிஞர் முகமட் பார்ஹான் முகமட் ஷாபி தொடர்பு கொண்டபோது இந்த விஷயத்தை உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

“முறையீடு இன்று தாக்கல் செய்யப்பட்டது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்,” என்று அவர் கூறினார்.

நஜீப், இரண்டு உத்தரவாதங்களுடன் 2 மில்லியன் ரிங்கிட் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை (ஜூலை 28) முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டதை அடுத்து, தற்காப்பு தரப்பு வாதங்களை செவிமெடுத்தப் பின்னர் நீதிபதி தண்டனையின் அமலாக்கத்தை ஒத்திவைத்தார்.

சிறைத் தண்டனை மற்றும் 210 மில்லியன் ரிங்கிட் அபராதம் ஆகிய இரண்டு அம்சங்களையும் தற்காலிகமாக ஒத்தி வைப்பதற்கான சிறப்பு சூழ்நிலைகளை தற்காப்பு தரப்பு வெற்றிகரமாக நிரூபித்துள்ளது என்று நீதிபதி நஸ்லான் முகமட் கசாலி தெரிவித்திருந்தார்.

இருப்பினும், பிணைத் தொகையை இரண்டு உத்தரவாதங்களுடன் மேலும் 1 மில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்க வேண்டும் என்று அவர் கூறினார். நஜிப் 6 மில்லியன் ரிங்கிட்டை பல்வேறு வழக்குகளுக்காக பிணைத் தொகையாக ஏற்கனவே நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார்.

இந்த எஸ்ஆர்சி வழக்கில் நஜிப்புக்கு பிணைத் தொகை 1 மில்லியனாக விதிக்கப்பட்டிருந்தது.

நஜிப் ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 தேதிகளில் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு சென்று கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

கூடுதல் 1 மில்லியன் ரிங்கிட் பிணைப் பணத்தைச் செலுத்த அவருக்கு புதன்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

67 வயதான நஜிப், தனது மகன் நோராஷ்மானுடன் மதியம் 1 மணியளவில் நேற்று நீதிமன்றத்தில் பிணைத் தொகையை செலுத்தினார்.