கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (ஆகஸ்டு 1) முதல், பொது இடங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்துகளில் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது.
அண்மையில், இது குறித்து அறிவித்த தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், இந்த புதிய கட்டுப்பாட்டுக்கு இணங்காதவர்களுக்கு 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியிருந்தார்.
“இக்கட்டளைக்கு இணங்க மறுக்கும் நபர்களுக்கு எதிராக, சட்டம் 342 (தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988)- இன் கீழ் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்” என்று அவர் கூறியிருந்தார்.
“இந்த முடிவு அமைச்சர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. ” என்று அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியிருந்தார்.
மீட்சிக்கான கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் ஒரு சில தளர்வுகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், திடீரென கொவிட்-19 சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து இந்த கட்டுப்பாட்டை அரசு விதித்துள்ளது.