Home One Line P1 சிவகங்கா தொற்றுக் குழுவில் எண்மருக்கு தொற்று!

சிவகங்கா தொற்றுக் குழுவில் எண்மருக்கு தொற்று!

408
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கெடாவில் சிவகங்கா தொற்றுக் குழுவுடன் அடையாளம் காணப்பட்ட எட்டு நபர்களுக்கு கொவிட்19 தொற்று கண்டிருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், ஜூலை 31- ஆம் தேதி வரை இந்த தொற்றுக் குழுவுடன் அடையாளம் காணப்பட்ட 262 பேர் கொவிட்19 தொற்றுக்கு பரிசோதிக்கப்பட்டனர் என்று கூறினார்.

இந்த எண்ணிக்கையில், எட்டு பேர் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கின்றனர். 251 பேர் தொற்றுக்கான அறிகுறிகளைக் கொண்டிருக்கவில்லை என்றும், இன்னும் மூன்று முடிவுகள் நிலுவையில் உள்ளன என்றும்  அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“எட்டு தொற்று சம்பவங்களில், ஐந்து பேர் மலேசியர்கள் அல்ல. நெருங்கிய தொடர்புகளை தீவிரமாக கண்டுபிடிப்பது இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, ” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சிவகங்கா தொற்றுக் குழுவில், ஜித்ராவில் உள்ள ஒரு உணவகத்தின் உரிமையாளர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நான்கு தொழிலாளர்கள் உள்ளனர்.

குபாங் பாசுவில் உள்ள சமூக மேம்பாட்டுத் துறையின் (கெமாஸ்) கீழ் மொத்தம் 73 மழலையர் பள்ளி மற்றும் மூன்று தினப்பராமரிப்பு நிலையங்கள் இந்த தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மூட உத்தரவிடப்பட்டன.

சில பாதுகாவலர்களும், பெற்றோர்களும் இந்த தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட உணவகத்திற்குச் சென்றதாக நம்பப்படுகிறது.

நாட்டில் நேற்று கொவிட் -19 தொடர்பான ஒரு மரணம் நிகழ்ந்துள்ளது. அவரது மரணம், நாட்டில் இறப்பு எண்ணிக்கையை 125- ஆகக் கொண்டுவருகிறது.

மலேசியாவில் நேற்று 12 புதிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது நாட்டின் மொத்த தொற்றுநோய்களை 8,976- ஆகக் கொண்டு வந்துள்ளது.