Home One Line P1 தேர்தல் ஆணைய உறுப்பினராக ராம்லான் இப்ராகிம் பதவி விலகல்

தேர்தல் ஆணைய உறுப்பினராக ராம்லான் இப்ராகிம் பதவி விலகல்

471
0
SHARE
Ad

புத்ராஜெயா: தேர்தல் ஆணைய உறுப்பினராக டத்தோஸ்ரீ ராம்லான் இப்ராகிம் பதவி விலகுவதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ராம்லானின் பதவி விலகல் மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் ஏற்றுக் கொண்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

“ஆணயத்தின் உறுப்பினராக டத்தோஸ்ரீ ராம்லான் இப்ராகிம் ஆற்றிய பங்களிப்புகள் மற்றும் சேவைகளுக்கு தனது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிக்க தேர்தல் ஆணையம் விரும்புகிறது” என்று அது கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

முன்னாள் உள்துறை அமைச்சக தலைமைச் செயலாளரான ராம்லான், 63, கடந்த ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.