Home One Line P2 டிக் டாக் 45 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட  டிரம்ப் அவகாசம்

டிக் டாக் 45 நாட்களுக்குள் விற்பனை செய்யப்பட  டிரம்ப் அவகாசம்

1031
0
SHARE
Ad

வாஷிங்டன் – சீனாவின் டிக்டாக் செயலியை தடை செய்யப் போவதாக அமெரிக்க அதிபர் அண்மையில் அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து அந்த குறுஞ்செயலியை வாங்குவதற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் டிக் டாக் செயலியை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் அடுத்த 45 நாட்களுக்குள் விற்பனை செய்யப்படவிருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கால அவகாசம் வழங்கி இருக்கின்றார்.

இந்த 45 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்தி சீனாவின் அந்த நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டுமென அவர் அவகாசம் வழங்கியிருப்பதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

சீனாவின் பைட் டான்ஸ் (ByteDance) என்று நிறுவனத்தை உரிமையாளராகக் கொண்டிருப்பதாலும் பயனர்களின் தனிப்பட்ட தரவுகளுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதாலும் அந்தக் குறுஞ்செயலி தடை செய்யப்படும் என டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதற்கிடையில் மைக்ரோசாப்ட்  தலைமை செயல் அதிகாரி  சத்யா நடெல்லாவுக்கும் (படம்) அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக எதிர்வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வரை டிக்டாக் மைக்ரோசாப்ட்டுக்கு விற்பனை செய்யப்பட கால அவகாசம் வழங்கி இருக்கின்றார்.

ரெட்வுட் என்ற மைக்ரோசாப்ட் தொடர்புடைய  நிறுவனம் டிக் டாக் செயலியை வாங்குவதற்கு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

மைக்ரோசாப்ட், பைட் டான்ஸ் இடையிலான பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவின் வெளிநாட்டு முதலீட்டுக் குழுவின் மேற்பார்வையில் நடைபெறுகிறது. எந்த ஓர் வெளிநாட்டு முதலீட்டு ஒப்பந்தத்தையும் தடை செய்ய இந்தக் குழுவுக்கு அதிகாரம் இருக்கிறது.

“அமெரிக்க அதிபரின் கவலைகளை மைக்ரோசாப்ட் உணர்ந்திருக்கிறது. டிக்டாக் விற்பனை முழுமையான பாதுகாப்பு மறுபரிசோதனைக்கு உட்படுத்தப்படும். அமெரிக்காவின் நலன்கள் பாதுகாக்கப்படும். அமெரிக்க நிதியகத்திற்கான பொருளாதார பலன்களும் உறுதி செய்யப்படும்” என மைக்ரோசாப்ட் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

இந்த விற்பனை ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலுள்ள டிக்டாக் வணிக செயல்பாடுகளை மைக்ரோசாப்ட் வாங்கிக் கொள்ளும்.

டிக்டாக் பயனர்களின் அனைத்து தனிப்பட்ட சொந்த தரவுகளும் அதற்குப் பின்னர் அமெரிக்காவுக்கு மாற்றப்பட்டு, அங்கேயே பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.

மைக்ரோசாப்ட் தொடர்ந்து மற்ற அமெரிக்க முதலீட்டாளர்களை டிக்டாக்கில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கும்.

தற்போது, டிக்டாக்கின் உரிமை பெற்றுள்ள நிறுவனமான பைட் டான்சின் முதலீட்டாளர்களில் 70 விழுக்காட்டினர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாவர்.