கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு கொவிட்19 தொற்று சம்பவம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,002-ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக அடையாளம் காணப்பட்ட சம்பவம் பெர்லிசில் பதிவாகி உள்ளது.
இன்று 16 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,684 -ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் மொத்தம் 193 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.