பெய்ரூட்: பெய்ரூட் துறைமுகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட வெடி விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 177- ஆக உயர்ந்துள்ளது.
லெபனான் சுகாதார அமைச்சர் ஹசான் ஹமாட் இதனை தெரிவித்தார்.
தலைநகரில் ஏற்பட்ட பயங்கர வெடிப்பில் 30 பேர் காணாமல் போயுள்ளதைக் குறிப்பிட்ட ஹமாட், இறப்பு எண்ணிக்கை 200-ஐத் தாண்டி உயரக்கூடும் என்று கூறினார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெளிநாடுகளின் உதவி விநியோக முறை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளதாக லெபனான் இராணுவம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு லெபனான் பெறும் உதவி எவ்வாறு விநியோகிக்கப்படும் என்பது பற்றிய தகவல்களும் வெளிநாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.
மருத்துவ உதவி விநியோகிக்கப்படுவதற்கு முன்னர் நாட்டின் சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் தேவைகள் தீர்மானிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் சுகாதார அமைச்சகத்துக்கும் தற்காப்பு அமைச்சகத்துக்கும் இடையிலான ஒருங்கிணைப்புக்கு ஏற்ப, மருத்துவ உதவி விநியோகிக்கப்படும். அதே நேரத்தில் இராணுவ மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் உணவு உதவி விநியோகிக்கப்படும்.
பெய்ரூட்டில் போராட்டங்களை ஏற்பாடு செய்த சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து லெபனான் இராணுவம் அந்நாட்டிலிருந்து பெறப்பட்ட உதவிகளை வெளிநாட்டு உதவிகளை பகிரங்கமாக விநியோகிக்கும் வழிமுறையை பகிர்ந்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி பெய்ரூட்டில் சக்திவாய்ந்த வெடிப்பு ஏற்பட்டது.
இந்த வெடிப்பின் அலை அருகிலுள்ள கட்டிடங்களை தரைமட்டமாக்கியது. தலைநகரில் பெரிய அளவிலான பொருள் சேதத்தை ஏற்படுத்தியது, இதனால் நூறாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.