கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடினின் அதிகாரப்பூர்வ பிறந்தநாளை முன்னிட்டு தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் மாரா பல்கலைக்கழக (யுஐடிஎம்) தலைவர் அர்ஷத் அயூப் ஆகியோருக்கு துன் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவுக்கு டான்ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
நான்கு பேருக்கு டான்ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய தலைமைச் செயலாளர் முகமட் சுகி அலி, சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹருன், தற்காப்புப் படைகளின் தலைவர் அபெண்டி புவாங் மற்றும் காவல் துறைத் தலைவர் அப்துல் ஹமீட் பாடோர் ஆகியோருக்கு இந்த பட்டங்கள் வழங்கப்பட்டன.
மாமன்னர், அல்- சுல்தான் அப்துல்லா பிறந்தநாளுடன் இணைந்து, 829 பேர் விருதுகளைப் பெற்றனர்.
நூர் ஹிஷாம் மற்றும் 11 பேர் டார்ஜா பாங்லிமா செத்தியா மஹ்கோத்தா (பிஎஸ்எம்) பட்டத்தைப் பெறுகிறார்கள். இது டான்ஸ்ரீ என்ற தலைப்பைக் கொண்டுள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் ரோஹனா யூசுப், பொது சேவைகள் துறை இயக்குநர் முகமட் கைருல் ஆதிப் அப்துல் ரஹ்மான், இராணுவத் தலைவர் ஜாம்ரோஸ் முகமட் ஜெய்ன், விமானப்படை தலைவர் அக்பால் அப்துல் சமாட், முன்னாள் காவல் துறைத் தலைவர் மஸ்லான் மன்சோர், மலேசிய ஒலிம்பிக் மன்ரத் தலைவர் முகமட் நோர்சா ஜகாரியா மற்றும் பெட்ரோனாஸ் தலைவர் அகமட் நிஜாம் சல்லே ஆகியோர் இந்த பட்டத்தினைப் பெற்றனர்.
லோட்டஸ் கார்ப்பரேஷன் தலைமை நிர்வாகி ஆர். துரைசிங்கம், சன்வே குழுமத்தின் தலைவர் செவ் சீ கின், பிளாட்டினம் விக்டரி ஹோல்டிங்ஸ் நிர்வாக இயக்குனர் கன் யூ சாய்; மற்றும் சேனா குழுமம் மற்றும் ஆப்டிமேக்ஸ் நிறுவனர் டான் பூன் ஹாக் ஆகிய நான்கு தொழிலதிபர்களுக்கும் பி.எஸ்.எம் பட்டம் வழங்கப்பட்டது.