Home One Line P2 நியூசிலாந்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

நியூசிலாந்தில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

631
0
SHARE
Ad

வெலிங்டன்: புதிதாக பதிவு செய்யப்பட்ட கொவிட்-19 தொற்று பாதிப்புக் காரணமாக, நியூசிலாந்து பிரதமர் ஜசிண்டா அடெர்ன் நியூசிலாந்தின் தேர்தலை அக்டோபர் 17 வரை நான்கு வாரங்கள் தாமதப்படுத்தினார். இந்த சூழ்நிலை பிரச்சாரத்திற்கு இடையூறு விளைவித்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

செப்டம்பர் 19- ஆம் தேதி அசல் தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், கொவிட் -19 தொற்று மீண்டும் ஏற்பட்டதை அடுத்து, நாட்டின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்து ஊரடங்கு உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டது.

“இந்த முடிவு அனைத்து கட்சிகளுக்கும் அடுத்த ஒன்பது வாரங்களில் பிரச்சாரம் செய்ய அவகாசம் அளிக்கிறது. தேர்தல் ஆணையம், தேர்தலை முன்னெடுத்துச் செல்வதை உறுதி செய்ய போதுமான நேரம் அளிக்கிறது” என்று அடெர்ன் கூறினார்.

#TamilSchoolmychoice

கடந்த வாரம் இந்த பாதிப்பைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தை நிறுத்திய பின்னர், தேர்தல் தேதியை மாற்றுமாறு மத்திய எதிர்க்கட்சித் தலைவர் அழுத்தம் கொடுத்தார்.

கடந்த செவ்வாயன்று ஆக்லாந்தில் நான்கு குடும்ப உறுப்பினர்களில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த நச்சுயிர் சமூகத்தில் பரவலான கவலையை ஏற்படுத்தியது.

ஞாயிற்றுக்கிழமைக்குள், ஆக்லாந்து 49 உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களை கொண்டுள்ளது. வாக்களிக்கும் தேதி குறித்து கட்சித் தலைவர்கள் மற்றும் தேர்தல் ஆணையத்துடன் வார இறுதியில் நடந்த ஆலோசனையைக் கருத்தில் கொண்டே அடெர்ன் இந்த முடிவைக் கூறினார்.

இந்த மாற்றம் அனைத்து தரப்பினரையும் ஒரே நிபந்தனைகளின் கீழ் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பதோடு, நிலைமையைக் கருத்தில் கொள்ளாமல், அக்டோபர் 17 தேதியை மீண்டும் நகர்த்த மாட்டேன் என்றும் அவர் கூறினார்.