Home One Line P1 தேசிய கூட்டணியில் கட்சிகளுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்த வேண்டும்

தேசிய கூட்டணியில் கட்சிகளுக்கு இடையில் உறவுகளை மேம்படுத்த வேண்டும்

493
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  தேசிய கூட்டணியில் உள்ள கட்சிகளின் பிணைப்புகளை வளர்ப்பதற்கும், கூட்டணியை மேம்படுத்துவதற்காக ஒருவருக்கொருவர் சகிப்புத்தன்மையுடன் இருக்குமாறும் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து ஜோகூர் பெர்சாத்து கட்சித் தலைவர் மஸ்லான் பூஜாங் தெரிவித்தார்.

“மனநிலை மகிழ்ச்சியாக இருந்தது, முதல்முறையாக, பெர்சாட்டு, பாஸ் உடன் இணைய முடிந்தது என்று எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமிடி, பெர்சாத்து, பாஸ் மற்றும் அம்னோவை முவாபாக்காட் நேஷனல் மூலம் இணைய அழைத்ததாகவும் மஸ்லான் தெரிவித்தார்.

முவாபாக்காட் நேஷனலின் ஒரு பகுதியாக இருக்க கட்சி எடுத்த முடிவை ஜோகூர் பெர்சாத்து எடுத்த முடிவை வரவேற்பதாக அவர் கூறினார்.

“எங்கள் வேறுபாடுகள் எதுவாக இருந்தாலும், இவை ஒதுக்கி வைக்கப்பட வேண்டும். இது மாநிலத்தையும் நாட்டையும் அபிவிருத்தி செய்வதற்கான ஒரு நல்ல தொடக்கமாகும் ” என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் கூறினார்.

மாநில பாஸ் கட்சித் தலைவர் அப்துல்லா ஹுசின், பெர்சாத்து, முவாபாக்காட் நேஷனலில் சேருவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று கூறினார். இது ஒற்றுமை மற்றும் அரசியல் முதிர்ச்சியை வளர்க்கும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.

சனிக்கிழமையன்று, மொகிதின், பெர்சாத்து கட்சி முவாபாக்காட் நேஷனலில் சேர ஒப்புக் கொண்டார.

உறுப்பினர்களுக்கு காணொளி செய்தியில் இது குறித்து தெரிவித்த மொகிதின், கட்சித் தேர்தலுக்கு முன்னதாக பெர்சாத்துவிற்கு துரோகம் இழைத்ததாகக் கூறப்படும் கருத்தினையும் நிராகரித்துப் பேசினார்.

“நான் கட்சிக்கு துரோகம் செய்யவில்லை. நான் இந்த கட்சியை நிறுவினேன், நான் நிறுவிய கட்சிக்கு துரோகம் இழைக்க எந்த காரணமும் இல்லை, ”என்று அவர் கூறியிருந்தார்.

முவாபாக்காட் நேஷனலில் சேர பெர்சாத்து எடுத்த முடிவினால், அரசியல் கட்சிகளின் பெரிய பங்களிப்பைக் காண இயலும் என்று கூறினார். இது அனைத்து மலேசியர்களுக்கும் நல்லதைச் செய்ய முடியும் என்று மொகிதின் தெரிவித்திருந்தார்.

“பெர்சாத்துவுக்கு இது சிறந்த தேர்வு என்று நான் நம்புகிறேன்.

“நாங்கள் அம்னோ, பாஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகளுடன் பெரிய கூட்டணியில் இருக்கத் தேர்ந்தெடுத்துள்ளோம். இது எங்களுடன் பெரும்பான்மையான மக்கள் இருப்பதைக் காண்பிக்கும்,” என்று அவர் கூறினார்.

மாநில அளவில், மொகிதின் பெர்சாத்து உறுப்பினர்களை தேசிய கூட்டணி உறுப்பியக் கட்சிகளின் உறுப்பினர்களுடன் பணிபுரியும் உறவுகளை வலுப்படுத்த ஊக்குவித்தார்.

நான்கு ஆண்டுகளில், பெர்சாத்து 197 தொகுதிகளையும் 2,000- க்கும் மேற்பட்ட கிளைகளையும் அமைத்துள்ளது.