Home One Line P2 கொவிட்19: தமிழகத்தில் தொடர்ந்து 100-க்கும் அதிகமான இறப்புகள்

கொவிட்19: தமிழகத்தில் தொடர்ந்து 100-க்கும் அதிகமான இறப்புகள்

513
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்டு 16) கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 338,055 ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் 5,950 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. 6,019 நபர்கள் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

நேற்று மட்டும் 125 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கடந்த 14- வது நாளாக 100- க்கும் அதிகமாக உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

இதனிடையே, இந்தியா தற்போது, அமெரிக்கா, பிரேசில் நாடுகளைக் காட்டிலும் மோசமான பாதிப்புகளை சந்தித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா உலகளாவிய தொற்று மையமாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.