Home One Line P1 கொவிட்19 நிதியுதவி மசோதாவுக்கு கூடுதல் 45 மில்லியன் ஒதுக்க வேண்டும்

கொவிட்19 நிதியுதவி மசோதாவுக்கு கூடுதல் 45 மில்லியன் ஒதுக்க வேண்டும்

476
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 நிதியுதவிக்கு அரசாங்கம்  முன்மொழிந்த மசோதாவை ஆதரிக்க எதிர்க்கட்சி தயாராக உள்ளது, ஆனால், இந்த தொகை 90 பில்லியனாக இருக்க வேண்டும் என்று முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.

இது தொற்றுநோயால் சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கும், வணிகங்களுக்கும் உதவ இப்போது ஒதுக்கப்பட்டுள்ள 45 பில்லியன் ரிங்கிட் போதுமானதாக இல்லை என்று அவர் கூறினார்.

“மற்றொரு 45 பில்லியனை திரட்ட முடியுமானால், நாங்கள் அரசியல் நலன்களை ஒதுக்கி வைக்கத் தயார். எதிர்க்கட்சி 100 விழுக்காடு மசோதாவை ஆதரிக்க தயாராக உள்ளது.

#TamilSchoolmychoice

“நாட்டின் பொருளாதாரத்தை காப்பாற்ற விரும்பினால் வரலாற்றை உருவாக்குவோம். கூடுதல் 45 பில்லியன் ரிங்கிட் தொகையை ஏற்படுத்துவோம். ” என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.

கொவிட்19 விதிமுறை மசோதாவை விவாதிக்கும் போது லிம் இதைக் கூறினார்.

இந்த மசோதாவை விவாதிக்க விரும்பும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், நிதி அமைச்சகம் அடுத்த திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் இது குறித்து பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.