Home One Line P1 எதிர்க்கட்சி அரசியல்வாதி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு சத்தியப்பிரமாணம் விசாரிக்கப்படுகிறது

எதிர்க்கட்சி அரசியல்வாதி தொடர்பான பாலியல் குற்றச்சாட்டு சத்தியப்பிரமாணம் விசாரிக்கப்படுகிறது

511
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த வார இறுதியில் எதிர்க்கட்சி அரசியல்வாதி தொடர்பாக வெளியிடப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு சத்தியப்பிரமாண அறிக்கையை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சத்தியப்பிரமாணம் தயார் செய்த நபர் ஞாயிற்றுக்கிழமை மலேசியா டுடே வலைப்பதிவில் இந்த ஆவணத்தை வெளியிடப்பட்ட பின்னர், ஒரு காவல் துறை புகார் அறிக்கையை பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து விசாரணை நடந்து வருவதாக புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை துணை இயக்குநர் (விசாரணை மற்றும் சட்ட) மியோர் பாரிடாலத்ராஷ் வாஹிட் உறுதிப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

“எங்களுக்கு ஒரு புகார் அறிக்கை கிடைத்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது. எங்கள் விசாரணை ஒவ்வொரு அம்சத்தையும் உள்ளடக்கும்” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

அந்த நபர் சிலாங்கூர், கோலாலம்பூர், ஜோகூர் மற்றும் பினாங்கு ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு தங்கும் விடுதிகளில், 2013-இல் அரசியல்வாதியுடன் நான்கு முறை உடலுறவு கொண்டதாகக் கூறினார்.

அரசியல்வாதியுடன் உடலுறவு கொண்ட ஒவ்வொரு முறையும் தனக்கு 300 ரிங்கிட் ரொக்கம் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

அரசியல்வாதியின் வேண்டுகோளின் பேரில், அரசியல்வாதிக்கு ஒரு நண்பரையும் அறிமுகப்படுத்தியதாக அவர் கூறினார்.

இந்த சத்தியப்பிரமாணம் ஜூன் 29 தேதியிடப்பட்டதாகும்.