புது டில்லி: இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு முன்னதாக கொவிட்19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சென்ற வாரம் அவர் கொவிட்19 தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், தற்போது மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக உடல் சோர்வு மற்றும் உடல் வலி இருந்ததாக அமித் ஷா கூறி வந்ததைத் தொடர்ந்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை கூறியுள்ளது.
“கடந்த 3 – 4 நாட்களாக உடல் சோர்வு குறித்தும் உடல் வலி குறித்தும் அமித்ஷா கூறிவந்தார் . அவருக்கு கொவிட்19 தொற்றில்லை என முடிவு வந்துள்ளது. அவர் எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நலமாக உள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே தன் பணிகளை செய்து வருகிறார்” என்று ஓர் அறிக்கையில் அது கூறியுள்ளது.
3 வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமித் ஷா பங்கெடுத்தார். அதன் பிறகுதான் அவருக்கு கொவிட்19 தொற்று இருப்பது உறுதியானது.