Home One Line P1 ‘மொகிதின் மறக்க முடியாத பழைய, நல்ல நண்பர்’- ஷாபி அப்டால்

‘மொகிதின் மறக்க முடியாத பழைய, நல்ல நண்பர்’- ஷாபி அப்டால்

531
0
SHARE
Ad
பழைய நண்பர்கள்” – ஷாபி அப்டால், மொகிதின் யாசின்

கோத்தா கினபாலு: மாறுபட்ட அரசியல் கருத்துக்கள் இருந்தபோதிலும், ஒரே அரசாங்கத் தலைமையில் இல்லாவிட்டாலும், சபா முதல்வர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினை ஒரு நல்ல நண்பராகவும், பழைய நண்பராகவும் ஒருபோதும் மறக்கமுடியாது என்று தெரிவித்துள்ளார்.

அரசியல் அரங்கில் ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை நினைவு கூர்ந்த அவர், குறிப்பாக 2016- ஆம் ஆண்டில் அம்னோவில் அவர்களின் இருண்ட சகாப்தத்தை விவரித்தார்.

​​”நான் அவருடைய நண்பராக இருக்கிறேன். அவர் என் பழைய நண்பர்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மொகிதினின் முந்தைய கருத்து குறித்து வினவப்பட்ட போது, அவர் இவ்வாறு கூறினார்.

முன்னதாக, ஷாபி அப்டால் தம்முடன் தற்போது இல்லாதது குறித்து பிரதமர் வருத்தத்தை வெளிப்படுத்தினார். அவர் ஒரு நல்ல நண்பர் என்று வர்ணித்த மொகிதின், முகமட் ஷாபி அரசாங்கத்தை வழிநடத்துவதில் அவருடன் இல்லை என்று கூறியிருந்தார்.

2016-ஆம் ஆண்டு ஜூன் 24-ஆம் தேதியன்று, அம்னோ, அப்போதைய அம்னோ துணைத் தலைவர் மொகிதின் மற்றும் உச்ச மன்றக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் ஆகியோரை பதவி நீக்கம் செய்து, முகமட் ஷாபி உறுப்பியத்தை இடைநீக்கம் செய்தது.

இடைநீக்கம் செய்த பின்னர் அம்னோவிலிருந்து விலகுவதாக ஷாபி அப்டால் அறிவித்தார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சியுடன் பணியாற்றுவது அவருக்கும் அவரது கட்சிக்கும் சற்று அருவருக்கத்தக்கது என்று வாரிசான் தலைவருமான ஷாபி அப்டால் கூறினார்.

“எனவே மக்கள் மறுத்தால், மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சியுடன் நாங்கள் பணியாற்ற விரும்ப மாட்டோம். மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சியுடன் நாங்கள் பணியாற்றினால், நாங்கள் மக்களால் நிராகரிக்கப்படுவோம்” என்று ஷாபி தெரிவித்தார்.