செலாமாட் தொற்றுக் குழு என்று அழைக்கப்படும் இப்புதிய தொற்றுக் குழு செம்போர்னாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 32 வயதான மலேசியர் செப்டம்பர் 14 அன்று இந்த தொற்றுக்கு ஆளாகினார்.
நோயாளி பிரசவத்திற்கு முன்னர் தாவாவ் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டுள்ளார் என்று சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நெருங்கிய தொடர்புகள் பற்றிய சோதனைகள் மூலம், அவருக்கு சிகிச்சையளித்த ஒரு மருத்துவ அதிகாரி மூலம் அவர் இந்த நோய் பாதிக்கப்பட்டுள்ளதை அவர்கள் கண்டறிந்தனர் என்று அவர் கூறினார்.
செப்டம்பர் 17 வரை, இந்த தொற்றுக் குழு சம்பந்தமாக 118 நபர்கள் பரிசோதனை செய்யப்பட்டனர். 116 நபர்கள் பரிசோதனைகளின் முடிவுக்காக காத்திருக்கிறார்கள்.
இன்றைய நிலவரப்படி, நண்பகல் வரையில் 21 புதிய கொவிட்-19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 16 உள்ளூர் நோய்த்தொற்றுகள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட 5 சம்பவங்கள் ஆகியவை அடங்கும்.
புதிய சம்பவங்களைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 10,052 சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
15 பேர் இன்று சிகிச்சை குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறினர்.
இதுவரையில் மொத்தமாக 9,250 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது 674 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 13 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.
உள்நாட்டில் பீடிக்கப்பட்ட 16 சம்பவங்களில் 15 பேர் மலேசியர்கள், ஒருவர் வெளிநாட்டவர்.