Home One Line P1 பொருளாதார எதிர்காலத்திற்காக சபா மக்கள் வாக்களிப்பார்கள்- அனுவார் மூசா

பொருளாதார எதிர்காலத்திற்காக சபா மக்கள் வாக்களிப்பார்கள்- அனுவார் மூசா

523
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒரு சிறந்த பொருளாதார எதிர்காலத்திற்காக மாநில அரசாங்கத்தின் மாற்றத்திற்கு சபா மக்கள் வாக்களிப்பார்கள் என்று தாம் நம்புவதாக தேசிய முன்னணி பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

“சபா பொருளாதாரம் ஒரு கவலையான நிலையில் இருப்பதை நாம் காண்கிறோம். அதே நேரத்தில் தேசிய அளவில் கொவிட்19 மீட்பு திட்டங்களுடன் நிலைமை மேம்பட்டு வருகிறது.

“நிலைமையை சரிசெய்ய (பொருளாதாரத்தை புதுப்பிக்க) நாங்கள் சபா மக்களுடன் நிற்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

16- வது சபா மாநிலத் தேர்தல் தேசிய முன்னணிக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக அவர் கூறினார். மாநிலத்தின் அரசியல் நிலப்பரப்பு வேறுபட்டிருப்பதே இதற்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

“நாங்கள் குறிப்பாக அம்னோ மற்றும் தேசிய முன்னணி கட்சி தலைவர்களுக்கு அதிகாரம் அளித்ததால், ஒத்துழைப்பு முக்கியமானது என்பதை நாங்கள் நினைக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

17 இடங்களில் தேசிய முன்னணி மற்றும் அதன் கூட்டணிகளான தேசிய கூட்டணி, பிபிஎஸ் ஆகியவற்றுக்கிடையேயான மோதல்கள் குறித்து கருத்துரைத்த அனுவார், காபுங்கான் ராக்யாத் சபா (ஜிஆர்எஸ்) இந்த நிலைமை எதிர் தரப்பினருக்கு சாதகமாக போய்விடக்கூடாது என்பதை உறுதி செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

ஜிஆர்எஸ் தேசிய முன்னணி, தேசிய கூட்டணி மற்றும் பிபிஎஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக மத்திய அரசுடன் இணைந்த அரசாங்கத்தை சபா மக்கள் தேர்ந்தெடுப்பது முக்கியம் என்று அவர் தெரிவித்தார்.

தேசிய முன்னணி 41 இடங்களிலும், தேசிய கூட்டணி 29 இடங்களிலும் போட்டியிடுகிறது. பிபிஎஸ், 22 இடங்களில் போட்டியிடுகிறது.