Home One Line P1 இன்று தொடங்கி சுஹாகாம் சபா தேர்தலை கண்காணிக்கும்

இன்று தொடங்கி சுஹாகாம் சபா தேர்தலை கண்காணிக்கும்

805
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய மனித உரிமைகள் ஆணையம் (சுஹாகாம்) சபா தேர்தலை இன்று முதல் சனிக்கிழமை வாக்குப்பதிவு வரை கண்காணிக்கும்.

ஆணையர்கள், பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் அடங்கிய 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் பிரச்சாரம், வாக்களிப்பைக் கண்காணிக்க இருப்பார்கள் என்று சுஹாகாம் கூறியது.

மாதுங்கோங், பண்டாவு, கரம்புனை, டாராவ், கெபாயான், மோயோக், மெம்பாகுட், கோலா பென்யு, சூக், நபாவான், கும்-கும், சுங்கை மணிலா, கெமாபோங், மெலாலாப், புகாயா, சுலாபாயான், செனால்லாங், குகுசான், தன்சோங் பத்து , இனானாம் மற்றும் அபி-அபி ஆகிய இடங்களில் அது கண்காணிப்பை மேற்கொள்ளும்.

#TamilSchoolmychoice

“எனவே, இந்த காலகட்டத்தில் எந்தவொரு தேர்தல் குற்றங்கள் பற்றிய தகவல்களை வாக்காளர்களிடமிருந்து சுஹாகாம் வரவேற்கிறது ,” என்று அது இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“வாக்காளர்கள் சபா சுஹாகாம் அலுவலகத்தை 088-317405 அல்லது 019-324 5650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். சுஹாகாம் அதன் கண்காணிப்பு கண்டுபிடிப்புகள் அனைத்தையும் செப்டம்பர் 27 அன்று மக்களுக்கு தெரிவிக்கும்.”

தேர்தல் கண்காணிப்புக் குழுவான பெர்சே 2.0-வும், தேர்தலை கண்காணித்து வருகிறது. தேர்தல்களுக்குப் பிறகு அதன் கண்டுபிடிப்புகள் குறித்த அறிக்கையை வெளியிடும்.