Home One Line P1 கொவிட்19: புதிதாக 57 சம்பவங்கள்

கொவிட்19: புதிதாக 57 சம்பவங்கள்

525
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் இன்று 57 புதிய கொவிட்19 நோய்த் தொற்றுகளை அறிவித்துள்ளது. அவற்றில் 51 சம்பவங்கள் உள்ளூர் பரவல்கள் ஆகும்.

இப்புதிய நோய்த்தொற்றுகள் மூலம் மொத்த கொவிட்19 நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 10,276 – ஆக உயர்ந்துள்ளது.

சபாவில் மீண்டும் 49 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதில் 14 புலாவ் தொற்றுக் குழுவிலிருந்தும், 12 செலாமாட் தொற்றுக் குழுவிலிருந்தும் வந்துள்ளன.

#TamilSchoolmychoice

இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து 130 -ஆக உள்ளது.

40 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மொத்தமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,395- ஆக உள்ளதாக சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

தற்போது 751 பேர் இன்னமும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ஒன்பது நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளனர். இரண்டு பேருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.