Home One Line P1 ஐநா சபையில் பிரதமராக மொகிதின் யாசின் முதல் உரை

ஐநா சபையில் பிரதமராக மொகிதின் யாசின் முதல் உரை

796
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுப் பேரவையில் மலேசிய பிரதமராக டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தனது முதல் உரையை இன்று திங்கட்கிழமை (செப்டம்பர் 21) நியூயார்க்கில் நடைபெறும் உயர்மட்டக் கூட்டத்தில் பேசவுள்ளார்.

இது முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட காணொலி உரையாகும்.

ஐநா மன்றத்திற்கு இந்த ஆண்டு 75- வது ஆண்டு நிறைவாகும் நிலையில், இக்கூட்டத்தில், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் முக்கிய பங்கிற்கு மலேசியாவின் தொடர்ச்சியான ஆதரவும், என்றும் முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் கூறியது.

#TamilSchoolmychoice

“தற்போதைய உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதில் இந்த அமைப்பு பொருத்தமானதாக இருப்பதை உறுதிப்படுத்த ஐ.நா எடுக்க வேண்டிய மாற்றங்களை மொகிதின் கோடிட்டுக் காட்டுவார்” என்று விஸ்மா புத்ரா கூறியது.

1945-ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்திடப்பட்ட அதன் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளை அடைய உலகத் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட இந்த உச்சிமாநாடு வாய்ப்பளிக்கிறது.

அனைத்துலக அமைதி மற்றும் பாதுகாப்பைப் பேணுவதற்கும், சமூக முன்னேற்றத்தையும் சிறந்த வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதற்கும், அனைத்துலக சட்டத்தை வலுப்படுத்துவதற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும் இந்த சாசனம் உதவுகிறது.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து பொது விவாத அமர்வு நாளை தொடங்கி செப்டம்பர் 29 வரை நடைபெறும் என்று விஸ்மா புத்ரா தெரிவித்தது.

செப்டம்பர் 26-ஆம் தேதி நடைபெறும் பொது விவாதத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டை மொகிதின் முன்வைக்க உள்ளதாக விஸ்மா புத்ரா குறிப்பிட்டுள்ளது.