Home One Line P1 ‘முடா’ கட்சியில் 12 மணி நேரத்தில் 7,000 பேர் இணைந்தனர்

‘முடா’ கட்சியில் 12 மணி நேரத்தில் 7,000 பேர் இணைந்தனர்

578
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தம்மீதும், தமது புதிய கட்சியான முடா மீதும் அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அப்துல் அசிஸ் இழிவாகப் பேசியது, கட்சியை உயர்த்த உதவியது என்று சைட் சாதிக் சைட் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

நஸ்ரி தம்மை “அப்பாவி, முதிர்ச்சியற்றவர்” என்று வர்ணித்ததைத் தொடர்ந்து, முடா 12 மணி நேரத்திற்குள் மொத்தம் 7,000 உறுப்பினர்களின் விண்ணப்பங்களைப் பெற்றதாக சைட் தெரிவித்தார்.

“நஸ்ரியால் அவமதிக்கப்பட்ட பின்னர், 12 மணி நேரத்திற்குள் 7,000- க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்களைப் பெற்றோம். மக்களின் சிந்தனையை குறைத்து மதிப்பிடாதீர்கள்.

#TamilSchoolmychoice

“இளைஞர்கள், எங்களுக்கு தகர்க்க வலுவான சக்தி உள்ளது. முடாவை தகர்க்கும் சக்தியாக உருவாக்குவோம்” என்று அவர் இன்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

சைட் சாதிக்கின் புதிய முயற்சிகள் குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டின் கருத்துகளுடன் நஸ்ரி உடன்படுவதாகக் கூறியிருந்தார்.

“… இது இயங்காது. மகாதீர் சொன்னது போல, வயதானவர்களை ஒதுக்குகிறது. இரண்டாவதாக, எல்லா இளைஞர்களும், இளைஞர்கள் கட்சியை ஆதரிக்க மாட்டார்கள்.

“அனைத்து கட்சிகளுக்கும் தங்களது சொந்த இளைஞர் பிரிவு உள்ளது. அம்னோ இளைஞர்கள் மிகவும் வலுவான இயக்கம். அவர்கள் அம்னோவை விட்டு வெளியேறி அவர்களது கட்சியை ஆதரிக்க விரும்புகிறார்கள் என்று நினைக்கிறீர்களா? இல்லை,” என்று அவர் கூறினார்.

இதற்கு முன்னர், முடா “இளைஞர்கள் தலைமையிலான” கட்சி என்றும், “இளைஞர்களுக்கு பிரத்தியேகமானது அல்ல” என்றும் சைட் சாதிக் கூறியிருந்தார்.

இனம் மற்றும் வயது வித்தியாசமின்றி அனைத்து மலேசியர்களுக்கும் கட்சி போராடும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.