Home One Line P1 முடா: சைட் சாதிக் கட்சி பதிவு செய்யப்பட்டது, சின்னமும் வெளியானது

முடா: சைட் சாதிக் கட்சி பதிவு செய்யப்பட்டது, சின்னமும் வெளியானது

618
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று காலையில் கட்சியைப் பதிவு செய்ய இருப்பதாகக் கூறிய சைட் சாதிக் அப்துல் ரஹ்மான், தமது புதிய கட்சியை சங்கப் பதிவாளரிடம் பதிவு செய்தார். மேலும், கட்சிக்கு மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (முடா) என்று பெயரிட்டு அதன் சின்னத்தையும் வெளியிட்டுள்ளார்.

#MUDAsudahMULA என்ற ஹேஷ்டேக்குடன் கட்சி சின்னத்தின் படத்தை இன்று டுவிட்டரில் அவர் வெளியிட்டார்.

கட்சியின் பெயர் ‘முடா’ என்று இருந்தாலும் அதன் உறுப்பினர்களுக்கு வயது வரம்பு இருக்காது என்று சைட் சாதிக் கூறினார்.

#TamilSchoolmychoice

அவர் இளைஞர்களை மையமாகக் கொண்ட கட்சியைத் தொடங்கப்போவதாக முன்னதாக அறிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் பிற அரசியல் தலைவர்கள் அத்தகைய கட்சியின் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கியதுடன், உள்ளூர் அரசியல் களத்தில் அதன் தாக்கத்தை குறைத்து மதிப்பிட்டனர்.

அண்மையில், தமது புதிய கட்சியினை விமர்சித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு பதில் கூறும் வகையில், தமது கட்சி அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என்று தெரிவித்திருந்தார்.

இது ஒன்றே இளைஞர்கள் அவருடன் ஒன்றிணைய ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

அண்மையில், சைட் சாதிக்கின் இளைஞர்கள் கட்சி மலாய்க்காரர்களை மேலும் பிளவு படுத்தும் என்று மகாதீர் குறிப்பிட்டிருந்தார். அவரது கட்சி வெற்றிப் பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கருத்துரைத்த சைட் சாதிக், தாம் துன் மகாதீரின் கருத்தினை மதிப்பதாகவும், தமது தற்போதைய பணியானது, அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைப்பதாகும் என்றும் அவர் தெரிவித்த்தார்.

“நான் இங்கு மலாய்க்காரர்களின் சேவகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. அனைத்து மலேசியர்களின் சேவகனாக இருக்க விரும்புகிறேன். நான் மலாய்க்காரர்களை ஒன்றிணைக்க மட்டும் இல்லை, அனைத்தும் மலேசியர்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறேன்”

“நான் துன் மகாதீரை மதிக்கிறேன். ஓர் இளைஞனாக, நம்பிக்கையுடன், மலேசியாவில் பன்முகத்தன்மை நம் பலம் என்று நான் மிகவும் நம்புகிறேன்.

“அவர் மலாய்க்காரர்களின் வாக்குகளை சிதைப்பதைப் பற்றி பேசுகிறார், ஆனால், நான் அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட கட்சி பற்றிய சைட் சாத்திக்கின் கருத்தை “வயதானவர்களை” ஓரங்கட்டிவிடும் என்று மகாதீர் விமர்சித்திருந்தார்.

எவ்வாறாயினும், புதிய கட்சி இளைஞர்களால் வழிநடத்தப்படும் என்றும், இளைஞர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமானது அல்ல என்றும் சைட் சாதிக் கூறியிருந்தார்.