Home One Line P1 ‘முடா’- சைட் சாதிக்கின் புதிய கட்சி

‘முடா’- சைட் சாதிக்கின் புதிய கட்சி

750
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்காலிகமாக ‘முடா’ என்ற பெயரில் ஒரு புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதாக சைட் சாதிக் அப்துல் ரஹ்மான் கூறியுள்ளதாக சமூகப் பயனர் தெரிவித்துள்ளார். கட்சி இன்று பதிவு செய்யப்படும் என்று கூறப்படுள்ளது.

பெர்சாத்து இளைஞர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சைட், இன்று காலை வணிக வானொலி நிலையமான பி.எப்.எம் 89.9- இல் இது குறித்து பேசியுள்ளார்.

மலேசியா தினத்தன்று சைட் சாத்திக் நேற்று #MUDAsudahMULA என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தியதை அடுத்து இந்த வெளியீடு வந்துள்ளது.

#TamilSchoolmychoice

நேற்றிலிருந்து, கட்சியை உருவாக்குவதற்கான விவாதங்களில் ஈடுபட்டுள்ள பல இளைஞர் தலைவர்கள் அதே ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். புதிய தலைமுறை அரசியல்வாதிகள் மீதான அவர்களின் நம்பிக்கையை அவர்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

சைட் சாதிக்கின் இப்புதிய கட்சியின் மீது பல்வேறு கருத்துகள் முன்வைக்கபட்டாலும், இளைஞர்கள் மத்தியில் இது பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

அண்மையில், தமது புதிய கட்சியினை விமர்சித்த முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு பதில் கூறும் வகையில், தமது கட்சி அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என்று தெரிவித்திருந்தார். இது ஒன்றே இளைஞர்கள் அவருடன் ஒன்றிணைய ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

அண்மையில், சைட் சாதிக்கின் இளைஞர்கள் கட்சி மலாய்க்காரர்களை மேலும் பிளவு படுத்தும் என்று மகாதீர் குறிப்பிட்டிருந்தார். அவரது கட்சி வெற்றிப் பெற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து கருத்துரைத்த சைட் சாதிக், தாம் துன் மகாதீரின் கருத்தினை மதிப்பதாகவும், தமது தற்போதைய பணியானது, அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைப்பதாகும் என்றும் அவர் தெரிவித்த்தார்.

“நான் இங்கு மலாய்க்காரர்களின் சேவகனாக மட்டுமே இருக்க விரும்பவில்லை. அனைத்து மலேசியர்களின் சேவகனாக இருக்க விரும்புகிறேன். நான் மலாய்க்காரர்களை ஒன்றிணைக்க மட்டும் இல்லை, அனைத்தும் மலேசியர்களையும் ஒன்றிணைக்க விரும்புகிறேன்”

“நான் துன் மகாதீரை மதிக்கிறேன். ஓர் இளைஞனாக, நம்பிக்கையுடன், மலேசியாவில் பன்முகத்தன்மை நம் பலம் என்று நான் மிகவும் நம்புகிறேன்.

“அவர் மலாய்க்காரர்களின் வாக்குகளை சிதைப்பதைப் பற்றி பேசுகிறார், ஆனால், நான் அனைத்து மலேசியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட கட்சி பற்றிய சைட் சாத்திக்கின் கருத்தை “வயதானவர்களை” ஓரங்கட்டிவிடும் என்று மகாதீர் விமர்சித்திருந்தார்.

எவ்வாறாயினும், புதிய கட்சி இளைஞர்களால் வழிநடத்தப்படும் என்றும், இளைஞர்களுக்கு மட்டுமே பிரத்தியேகமானது அல்ல என்றும் சைட் சாதிக் கூறியிருந்தார்.