புது டில்லி: இந்தியா முழுவதும் கொவிட்19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.1 மில்லியனைக் கடந்துள்ளது.
ஏறக்குறைய இரண்டு வாரங்களில் இந்த எண்ணிக்கையானது அமெரிக்காவை முந்திச் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 97,894 பேர் இத்தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 1,132 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒட்டுமொத்த பாதிப்பானது 5,118,254- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 83,198 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,009,976 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையிலும் 4,025,080 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கொவிட்19 நோயாளிகளின் எண்ணிக்கையில் 49 விழுக்காட்டினை பிரதிபலிக்கின்றன. இறப்பு எண்ணிக்கையில் அவை 52 விழுக்காட்டினைக் கொண்டிருக்கின்றன.