பியோபோர்ட்: மீனவர்களுக்கான சாரா ஹிடுப் உதவித் தொகை ஒரு மாதத்திற்கு 250 ரிங்கிட்டிலிருந்து 300 ரிங்கிட்டுக்கு உயர்த்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று தெரிவித்தார்.
“நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தை நடத்தி வந்த காலத்தில், வாரிசான் நம்பிக்கைக் கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தது என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். அந்த நேரத்தில், மீனவர்களுக்கான சாரா ஹிடுப் உதவித் தொகை 300 ரிங்கிட்டிலிருந்து 250 ரிங்கிட்டாக குறைக்கப்பட்டது.
“இன்று, நாங்கள் அதை மீட்டெடுக்கிறோம் என்று அறிவிக்க விரும்புகிறேன்,” என்று அவர் கோத்தா கினபாலுவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இத்திட்டம், தகுதிவாய்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள் மற்றும் மீனவர்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உதவுவதற்காக மானியங்கள், கொடுப்பனவுகள், இனப்பெருக்கம் திட்ட ரூபத்தில் உதவிகளை வழங்குகிறது.
இந்த திட்டத்தில் தேசிய உழவர் அமைப்பு (நாபாஸ்), மலேசிய மீன்வள மேம்பாட்டு ஆணையம் (எல்.கே.ஐ.எம்), உழவர் அமைப்பு ஆணையம் (எல்பிபி) மற்றும் அக்ரோபங்க் போன்ற நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.