Home One Line P1 நீண்ட நாட்களுக்குப் பிறகு மூசா பொது நிகழ்ச்சியில் தோன்றினார்

நீண்ட நாட்களுக்குப் பிறகு மூசா பொது நிகழ்ச்சியில் தோன்றினார்

557
0
SHARE
Ad

பியோபோர்ட்: சபா மாநிலத் தேர்தலைத் தூண்டி, போட்டியிடாத முன்னாள் சபா முதல்வர் மூசா அமான், இன்று காலை இங்கு நடந்த ஒரு பொது நிகழ்ச்சியில் ஆச்சரியமான வருகைப் புரிந்திருந்தார்.

பிரதமர் கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காத்திருந்த மூசா, முக்கியப் பிரமுகர்களுடன் அமர்ந்திருந்தார்.

உள்ளூர் தலைவர்கள் மற்றும் கிராமவாசிகள் உட்பட பலர் மூசாவுடன் புகைப்படங்களையும் காணொலிகளையும் எடுத்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

மூசா, ஜூலை 29 அன்று முகமட் ஷாபி அப்டால் அரசாங்கத்தை வெளியேற்றுவதற்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து போதுமான ஆதரவைப் பெற்றதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அடுத்த நாள், சபா மாநில சட்டமன்றத்தை கலைப்பதாக ஷாபி அறிவித்தார். இதனால், தேர்தல் ஆணையம் செப்டம்பர் 26-ஆம் தேதி மாநிலத் தேர்தலை நிர்ணயித்தது.

தற்போதைய சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினரான மூசா, எந்தவொரு வேட்புமனு மையத்திலும் தம்ம வேட்பாளராக அறிவிக்கவில்லை. இருப்பினும் அவர் சுங்கை மணிலாவுக்கு போட்டியிடுவார் என்று முன்னர் ஊகிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தை சபா தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தாரும் மறுத்த்திருந்தார்.