Home One Line P1 ‘நானே முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்’- மூசா அமான்!

‘நானே முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்’- மூசா அமான்!

557
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: முன்னாள் சபா முதல்வர் மூசா அமான், ஷாபி அப்டாலுக்கு பதிலாக மாநிலத்தின் புதிய முதல்வராக நியமிக்கப்படத் தானே தகுதியானவர் என்று வலியுறுத்தி உள்ளார்.

முகநூலில் பதிவேற்றிய ஒரு காணொளி பதிவில், மாநில ஆளுநர் தமக்கு பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டிய பொறுப்பு உள்ளது என்று மூசா அமான் தெரிவித்தார்.

“சபா முதலமைச்சராக நியமிக்கப்படுவதற்கு நான் தகுதியானவன், ஏனெனில் எனக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளது.

#TamilSchoolmychoice

“சபாவுக்காக ஒரு புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எனக்கு பெரும்பான்மை இருக்கிறதா என்பதை கவனிக்க அரசியலமைப்பின் கீழ் ஆளுநருக்கு பொறுப்பு உள்ளது” என்று அவர் கூறினார்.

சட்டமன்றம் கலைக்க முன்மொழியப்பட்ட ஷாபியின் நடவடிக்கையால் தாம் ஆச்சரியப்படவில்லை என்றும் மூசா கூறினார்.

“உண்மையில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம்,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், 33 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மூசா குறுகிய பெரும்பான்மையைக் கொண்டிருப்பதாக பெர்னாமா தெரிவித்துள்ளது.