Home One Line P1 மூசா அமான் சுங்கை மணிலாவில் போட்டி

மூசா அமான் சுங்கை மணிலாவில் போட்டி

590
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: லிபாரான் நாடாளுமன்றத் தொகுதியில் 13 புதிய சட்டமன்றங்களில் ஒன்றான சுங்கை மணிலா தொகுதியில் போட்டியிடுவதாக டான்ஸ்ரீ மூசா அமான் இன்று அறிவித்தார்.

முன்னாள் சபா முதலமைச்சரும், சுங்கை சிபுகா சட்டமன்ற உறுப்பினருமான அவர், தாம் சுங்கை மணிலாவில் போட்டியிடுவதாக தமது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளார். ஆனால், இந்த மாற்றம் எதற்காக என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

“நான் மீண்டும் சுங்கை மணிலாவுக்குச் செல்கிறேன்,” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

ஆனால், இந்த விவகாரம் இன்னும் சபா அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடினுடன் பேச்சுவார்த்தைகளில் உள்ளது என்று ஒரு வட்டாரம் தெரிவித்துள்ளது.

“உள் அரசியல். அவருக்கு அங்கு செல்வாக்கு இருப்பதாக தெரியவில்லை, ” என்று ஒரு கட்சி வட்டாரம் தெரிவித்தது.

13-வது பொதுத் தேர்தலில் 11,569 பெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்ற மூசா, 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 2,184 பெரும்பான்மையுடன் சுங்கை சிபுகாவை வென்றார். அங்கு அவர் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்ற புரிதலை ஏற்படுத்திக் கொண்டார்.

சுங்கை சிபுகாவில் மூசாவின் ஆதரவில் அதிக விழுக்காடு வாக்குகள் சுங்கை மணிலாவுக்கு மாற்றப்பட்டுள்ளன.

ஜூலை 29-ஆம் தேதி மாநில அரசாங்கத்தை அமைக்க தோல்வியுற்ற பின்னர், மூசா கட்சிக்குள்ளேயே சவால்களை எதிர்கொள்கிறார்.

வரவிருக்கும் தேர்தலுக்கான அம்னோ மற்றும் தேசிய முன்னணி வேட்பாளர்கள் நாளை காலை அறிவிக்கப்பட உள்ளனர்.

95 விழுக்காடு இட ஒதுக்கிடு பேச்சுவார்த்தைகளை அவர்கள் முடித்துவிட்டதாக அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி கூறியிருந்தார்.