Home One Line P1 சபா தேர்தல்: மூசா அமான் வேட்பாளர் பட்டியலில் இல்லாதது தீங்கு விளைவிக்கும் செயல்!

சபா தேர்தல்: மூசா அமான் வேட்பாளர் பட்டியலில் இல்லாதது தீங்கு விளைவிக்கும் செயல்!

530
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் அடுத்த மாநிலத் தேர்தலுக்கான அம்னோ வேட்பாளர்களின் பட்டியலில் இல்லை என்று ஓர் அறிக்கையை வெளியிடவில்லை என்று சபா அம்னோ தொடர்புக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ புங் மொக்தார் ராடின் மறுத்துள்ளார்.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரம் தவறானது என்றும், அம்னோவுக்கு தீங்கு விளைவிக்கும் செயல் அது என்றும்  அவர் கூறினார்.

“அது (அறிக்கை) போலியான செய்தி. இதுபோன்ற ஓர் ஆதாரமற்ற அறிக்கையை நான் ஒருபோதும் வெளியிடவில்லை. இது ஒரு தவறான கூற்று. டான்ஸ்ரீ மூசாவுக்கு எதிராக என்னை பகையாக்குவதற்கும் அம்னோவை சேதப்படுத்துவதற்கும் வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது. இது பொறுப்பற்ற எதிரிகளின் நடவடிக்கை. “என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மேற்கூறிய அந்த அறிக்கையில், “அம்னோவின் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரே வழி (டான்ஸ்ரீ) மூசா அமானை சபா தேர்தலில் அம்னோ வேட்பாளர்கள் பட்டியலில் இருந்து நீக்குவதுதான்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சபாவின் அரசியல் நெருக்கடிக்கும், அம்னோவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அந்த அறிக்கை கூறியது.

புதன்கிழமை, சபாவில் பல கட்சிகளின் கூட்டணி மூலம் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு குறுகியப் பெரும்பான்மையைப் பெற்றதாக மூசா கூறினார்.

அரசியல் வளர்ச்சியைத் தொடர்ந்து, 60 நாட்களுக்குள் மாநிலத் தேர்தல் நடைபெற வழி வகுக்க மாநிலத்தின் ஆளுநர் ஜூஹார் மஹிருடினின் ஒப்புதலைப் பெற்ற பின்னர், சபா மாநில சட்டமன்றத்தைக் கலைப்பதாக முதல்வர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் அறிவித்தார்.

சில மணிநேரங்களுக்குப் பிறகு, 65 பேரில் 33 சட்டமன்ற உறுப்பினர்களுடன் குறுகிய பெரும்பான்மையைக் கொண்டிருப்பதாகக் கூறி மூசா மீண்டும் கூறினார். ஆயினும், ஆளுநரை சந்திக்கும் அவரது முயற்சி நிறைவேறாமல் போனது.