Home One Line P1 கொவிட்19: உத்திரபிரதேச அமைச்சர் தொற்றுக் காரணமாக மரணம்

கொவிட்19: உத்திரபிரதேச அமைச்சர் தொற்றுக் காரணமாக மரணம்

613
0
SHARE
Ad

புது டில்லி: கொவிட்19 தொற்றுக்கு முன்னதாக பரிசோதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த உத்தரப்பிரதேச அமைச்சர் கமல் ராணி வருண் ஞாயிற்றுக்கிழமை லக்னோவில் தொற்றுக் காரணமாக காலமானார்.

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த கமல் ராணி வருண், ஜூலை 18 அன்று கொவிட்19 தொற்றுக்கு சாதகமாக பரிசோதனை செய்யப்பட்டார். லக்னோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் இக்கொடிய நோயினால் மரணமுற்றார்.

கமல் ராணி வருண் உத்தரப்பிரதேச அரசில் தொழில்நுட்ப கல்வி அமைச்சராக பணியாற்றினார்.

#TamilSchoolmychoice

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கமல் ராணி வருணின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் திறமையாக பணியாற்றினார் என்று கூறியுள்ளார்.