Home One Line P1 சபா தேர்தல்: பெர்சாத்து எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்

சபா தேர்தல்: பெர்சாத்து எங்கு வேண்டுமானாலும் போட்டியிடலாம்

518
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த மாநிலத் தேர்தலில், சபாவில் எந்த சட்டமன்றத்தில் போட்டியிட வேண்டுமென்ற உரிமையை பெர்சாத்துவுக்கு கட்சி விட்டுக் கொடுக்கத் தயாராக இருப்பதாக அம்னோ சுட்டிக்காட்டியுள்ளது.

அதே நேரத்தில், பெர்சாத்து விரும்புவதைச் செய்யலாம், தேசிய முன்னணிக்கும் தனக்கு விருப்பமானதைச் செய்ய உரிமை உண்டு.

அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் அனுவார் மூசா இந்த விஷயத்தை சமூக ஊடகங்களில் குறிப்பிடுகையில், பெர்சாத்து அடுத்த மாநிலத் தேர்தலில் அவர்கள் விரும்பும் தொகுதியில் போட்டியிட முயற்சி செய்யலாம் என்று கூறினார்.

#TamilSchoolmychoice

“பெர்சாத்து அவர்கள் விரும்பும் அளவுக்கு தொகுதிகளில் போட்டியிட முடியும். அது அவர்களின் உரிமை. முயற்சி செய்யுங்கள் …” என்று அவர் நேற்று தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

அப்படியிருந்தும், 2018- ஆம் ஆண்டு முதல் சபாவை ஆட்சி செய்த வாரிசான் கட்சியை ஒருவரையொருவர் சவால் செய்ய, ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

எனவே, ஒரு வலுவான கட்சிக்கு போட்டியிட வழி வழங்கப்பட வேண்டும் என்று அனுவார் குறிப்பிட்டார்.

“இருப்பினும், நாம் வாரிசானுக்கு எதிராக நேராக (ஒன்றுக்கு எதிராக) போராட விரும்பினால், நிச்சயமாக நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வலுவான கட்சிக்கு போட்டியிடுவதற்கான வழியை நாம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.