
ஷாபி அப்டால் தலைமையிலான பார்ட்டி வாரிசான் சபா கட்சி தற்போது சபா மாநிலத்தை ஆட்சி செய்கிறதுஇந்நிலையில் சபா முதலமைச்சராக முன்பு பணியாற்றிய மூசா அமான் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு போதிய பெரும்பான்மை தனக்கு இருப்பதாக அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.இதைத் தொடர்ந்து சபாவில் எந்நேரத்திலும் ஷாபி அப்டால் ஆட்சி கவிழலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
எனினும், தனக்கு இன்னும் பெரும்பான்மை இருப்பதாக ஷாபி அப்டாலும் அறிவித்திருக்கிறார்.