Home One Line P2 ‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகலா?

‘800’ படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகலா?

786
0
SHARE
Ad

சென்னை: ‘800’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதி அப்படத்தில் நடிப்பதிலிருந்து விலகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், “நன்றி வணக்கம்” என்று விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்றத்தைப் பார்த்தவர்கள் தமிழினத் துரோகி முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்றும் உடனே 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.

#TamilSchoolmychoice

இதன் காரணமாக விஜய் சேதுபதிக்கு கடும் கண்டனங்கள் சமூகப் பக்கங்களில் வலுத்தன.

“எனது சுயசரிதை படமான 800 திரைப்படத்தை சுற்றி தமிழ்நாட்டில் சிலரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்ச்சைகள் காரணமாக இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.”

“என் மீதுள்ள தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி அவர்களுக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகிறேன். எனவே, என்னால் தமிழ் நாட்டில் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை நான் விரும்பவில்லை,” என்று அக்கடிதத்தில் முத்தையா தெரிவித்துள்ளார்.